×

மருத்துவ குணத்துடன் இருக்கும் 20 வருட சிவகுண்டலம் மரத்தை வேண்டாம்-தாசில்தாரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

போடி : போடி அருகே முந்தல் சாலையில் தனியார் கல்லுரி பரமசிவன் மலைக்கோயில் பிரிவில் பொதுமக்களுக்கு மருத்துவ குணத்துடன் பயன் தந்து வரும் 20 வருட சிவகுண்டல மரத்தை வெட்டாமல் வேரோடு பறித்து வேறு இடத்தில் நட்டு வைத்து பாதுகாக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் போடி தாசில்தாரிடம் புகார் மனு அளித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொச்சின் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சாலை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக மூணாறில் இருந்து போடி மெ ட்டு வழியாக தேனி வரை இருபுறங்களி லும் விரிவாக்கம் புதிய பாலப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக போடி முந்தல் சாலையில் ஒரு தனியார் கல்லூரி அருகிலும் கோடி பரமசிவன் மலைக்கோயில் பிரிவிலும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வைக்கப்பட்ட சிவகுண்டலம் மரம் வளர்ந்து பெரும் நிழல் தரும் மரமாக உள்ளது.

 இந்த மரத்தில் விளையும் மரச்சுரக்காய் ஞானக்கோம்பு என்ற பெயர்களை கொண்ட இந்த மரத்தில் சுரக்காய் போல் பெரிதாக வளர்ந்துள்ளது. இந்த மரம் அசுத்த காற்றினை இழுத்து அந்த மரத்திலிருந்து வெளியேறும் சுத்தமான மருத்துவ குணம் கொண்டது. ஆக்ஸிஜன் காற்று நடைபயிற்சி செல்பவர்களும் வாகனங்களில் கடந்து சுவாசிக்கும் போது நோய் நொடிகளை தீர்க்கும் பல்வேறு குறைகளை தீர்க்கும் மரமாக இருக்கிறது.

சிவன் பெயரில் கொண்ட சிவகுண்டலம் மரத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டி அகற்றப்படும் என்ற தகவ ல் தெரிவிக்கிறது. இதனால் மருத்துவ காற்றை தரும் இந்த மரத்தைவெட்டி அப்புறப்படுத்த கூடாது அதனை வேரோடு பறித்து அருகில் கோயில் பகுதிகளில் நட வேண்டும் என பசுமை முருகன் தலைமையில் சமூக ஆர்வலர்கள் போடி தாசில்தார் ஜலாலிடமும் , நெடுஞ்சாலைத்துறையினரிமும் புகார் மனு அளித்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sivagundalam ,Tahsildar , Bodi : Private college Paramasivan hill temple section on Munthal road near Bodi medical for public
× RELATED போடி தாசில்தார் அலுவலகத்திற்கு...