முத்துராமலிங்கத் தேவரின் 60வது குருபூஜை விழாவையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து தென் மண்டல ஐஜி தலைமையில் ஆலோசனை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தனி ஆயுதப்படை அலுவலகத்தில் அக். 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் 60 ஆவது குருபூஜை விழா நடைபெற உள்ளதையொட்டி  தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ராகார்க் தலைமையில் ஐந்து டிஐஜிக்கள்,  28 எஸ்பி க்கள் உள்ளிட்டோர் பங்கேற்று பாதுகாப்பு முன் ஏற்பாடு குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு பணியில் தென் மண்டல  ஐ.ஜி தலைமையில் 5 டி.ஐ.ஜிகள், 30 எஸ்.பிகள் முன்னிலையில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர் என்று தென் மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தகவல் அளித்துள்ளார்.

Related Stories: