×

டவ், டிரெஸ்சமி உள்ளிட்ட உலக ரக ஷாம்புகளால் புற்றுநோய் ஆபத்து: அதனை திரும்ப பெற யுனிலிவர் நிறுவனம் முடிவு

வாசிங்டன்: டவ், டிரெஸ்சமி உள்ளிட்ட உலக ரக ஷாம்புகளால் புற்றுநோய் ஆபத்து இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதனை திரும்ப பெற யுனிலிவர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அமெரிக்க சந்தையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டவ், டிரெஸ்சமி, நெக்ஸஸ், சுவேவ், டிகி உள்ளிட்ட பல உலர் ரக ஷாம்புகளில் பென்சீன் என்ற ஆபத்தான வேதிப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், புற்றுநோய் ஏற்படும் என்று அமெரிக்காவின் எஸ்டி அமைப்பு எச்சரித்துள்ளது. இதனையடுத்து அக்டோபர் 2021-க்கு முன் தயாரிக்கப்பட்ட உலராக ஷாம்புகளில் அனைத்து தயாரிப்புகளையும் திரும்ப பெற யுனிலிவர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஜான்சன் அண்ட் ஜான்சன்  உள்ளிட்ட பொருட்களால் புற்றுநோய் ஆபத்து இருப்பதாக தெரியவந்த நிலையில் அவைகள் அமெரிக்க சந்தையில் விற்பனை செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், முடியை ஈரப்படுத்தாமல் பயன்படுத்தப்படும் ஸ்ப்ரே - ஆன் ட்ரை ஷாம்புகளிலும் வேதிப்பொருள் அதிகளவில் பயன்படுத்தப்படுவது உடல்நலம் குறைவு ஏற்படுத்தும் என்ற அறிக்கையால் நுகர்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவ்வகை ஷாம்புகளில் உள்ள பென்சீன் என்ற வேதிபொருளால் லுகேமியா மற்றும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என்றும் அமெரிக்காவின் எஸ்டி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags : Dow ,Unilever , டவ், டிரெஸ்சமி, ஷாம்பு, புற்றுநோய், ஆபத்து, திரும்ப, பெற, யுனிலிவர், நிறுவனம், முடிவு
× RELATED சரக்கு, சேவை வரி பாக்கியை செலுத்தக்...