அமெரிக்காவில் டவ் ஷாம்பை திரும்ப பெற முடிவு: யுனிலீவர் தகவல்

அமெரிக்கா: அமெரிக்காவில் டவ் ஷாம்பை திரும்ப பெற யுனிலீவர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. பென்சீன் வேதிப்பொருள் கலந்ததின் காரணமாக தனது தயாரிப்புகளான டவ் ட்ரை ஷாம்பூ உள்ளிட்ட பல்வேறு ஷாம்புகளை திரும்பப் பெறுவதாக யுனிலீவர் நிறுவனம் அறிவித்துள்ளது . 2021 அக்டோபர் மாதத்திற்கு முந்தைய தனது தயாரிப்புகளில் புற்றுநோயை விளைவிக்கும் பென்சீன் கலந்துவிட்டதாகக் கூறி அவற்றை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. நெக்சஸ், சாவே, ட்ரெஸ்ஸமே, டிகி மற்றும் ஏரோஸார் ட்ரை ஷாம்பூ ஆகியனவற்றை அமெரிக்க சந்தைகளில் இருந்து திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது

Related Stories: