காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக கோவை உக்கடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை..!!

கோவை: கோவை உக்கடம் ஈஸ்வரன்கோவில் பகுதியில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்த விவகாரம் தொடர்பாக கோவையில் முகாமிட்டுள்ள தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர்.  கார் வெடிப்பு தொடர்பாக உபா சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், என்.ஐ.ஏ. விசாரிக்க முகாந்திரம் உள்ள வழக்காக கருதப்படுகிறது.  தேசிய புலனாய்வு முகமையின் டிஐஜி மற்றும் கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவினர் கோவையில் ஆய்வு மேற்கொள்கின்றனர். காரில் கொண்டுசெல்லப்பட்ட பொருட்கள் குறித்து காவல்துறையினரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் கேட்டறிந்து வருகின்றனர்.

ஜமேஷா முபினின் பிண்ணனி, வீட்டில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். என்.ஐ.ஏ. தகவல்களை திரட்டினாலும் தற்போது வரை விசாரணை கோவை போலீசார் வசமே உள்ளதாக ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கார் வெடித்த வழக்கு என்.ஐ.ஏ. வசம் செல்ல வாய்ப்பிருப்பதாக விசாரணை அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: