×

கோவை கார் வெடிப்பில் இறந்த நபர் தன் குற்றங்களை மன்னிக்க வாட்ஸ் அப்பில் கேட்டுள்ளார்: அண்ணாமலை பேட்டி

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, சென்னையில் உள்ள தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கோவையில் 23ம் தேதி கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு அதிகாலை 4 மணிக்கு ஒரு காரிலிருந்த சிலிண்டர் வெடித்தது. அதன்பிறகு தமிழக டிஜிபி கோவை சென்றார். பின்னர், சிலிண்டர் வெடித்து விபத்து நிகழ்ந்ததாக டிஜிபி கூறினார். இதில் உண்மையை சொல்ல வேண்டிய கடமை பாஜவுக்கு உள்ளது.இலங்கையில்269 பேர்பலியான சம்பவத்தில்  ஜமேசா முபினிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அக்.23 விபத்திலும் காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய நபர் ஜமேசா முபின் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

பின்னர், அந்த இறந்த நபரின் வீடுகளில் சோதனை நடத்தியபோது கிட்டத்தட்ட 55 கிலோ அமோனியம் நைட்ரேட், பொட்டாசியம், சோடியம், ப்யூஸ் வயர்ஸ், 7 வோல்ட் பேட்டரி கைப்பற்றியுள்ளனர். காரை ஓட்டி இறந்த ஜமேசா முபின் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை மாற்றியுள்ளார். என்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரியும் முன்பு நான் செய்த தவறை மன்னித்து விடுங்கள். என் குற்றங்களை மறந்துவிடுங்கள் என் இறுதி சடங்கில் பங்கு பெறுங்கள், எனக்காக வழிபாடு செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.  சி.சி.டி.வி.யில் அவரது வீட்டில் இருந்து 2 சிலிண்டர்களை நாலைந்து பேர் காரில் ஏற்றப்படும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர். அவர்களின் பெயர் விவரத்தையும் கொடுத்துள்ளனர். தற்கொலை படை தாக்குதல் என்று போலீசார் எந்த தகவலையும் கொடுக்கவில்லை என்றார்.

Tags : Cove , Man who died in Coimbatore car blast asks forgiveness for his crimes on WhatsApp: Annamalai interview
× RELATED கோவை வேளாண் பல்கலை.யில் 6-வது மலர் கண்காட்சி: துணைவேந்தர் துவக்கி வைத்தார்