×

தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் கட்டப்பட உள்ள இடத்தில் கமிஷனர் அமல்ராஜ் ஆய்வு

தாம்பரம்: தாம்பரத்தில் மாநகர காவல் ஆணையரகம் அமைய உள்ள இடத்தில் கமிஷனர் அமல்ராஜ் ஆய்வு செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்தவுடன், புதிதாக தாம்பரம் மாநகராட்சி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையரகம், சென்னை, தாம்பரம், ஆவடி என மூன்றாக பிரிக்கப்பட்டது. இதில், தாம்பரம் மாநகராட்சி அலுவலகம் மற்றும் தாம்பரம் மாநகர காவல் ஆணையரக அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்ட நிலம் தேடி வந்தனர். இந்நிலையில், தாம்பரம், காந்தி சாலையில் அரசுக்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள இரண்டரை ஏக்கர் நிலம் தனியார் ஒருவர் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலத்தை கையகப்படுத்தி அதில் உள்ள கட்டிடங்களை இடித்து அகற்றி நிலத்தை தாம்பரம் மாநகர காவல் ஆணையரக கட்டிடம் கட்டுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டு அங்கிருந்த கட்டிடங்களை போலீசார் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் மீட்டனர். இந்நிலையில், தாம்பரம் மாநகர காவல் ஆணையரக அலுவலகம் அமைய உள்ள நிலத்தை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் நேற்று ஆய்வு செய்தார். மேலும், புதிய அலுவலக கட்டிடப் பணிகளை விரைவாக தொடங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தாம்பரம் காவல் துணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி, உதவி ஆணையர் சீனிவாசன் உள்பட ஏராளமான அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : Commissioner ,Amalraj ,Tambaram Municipal Police Station , Commissioner Amalraj inspects the site where Tambaram Municipal Police Station is to be built
× RELATED காலை 5.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு:...