யு-17 மகளிர் உலக கோப்பை இன்று அரையிறுதி ஆட்டங்கள்

கோவா: ஃபிபா யு-17 மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி ஆட்டங்களில் நைஜீரியா - கொலம்பியா, ஜெர்மனி - ஸ்பெயின் அணிகள் இன்று மோதுகின்றன. இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும் இந்த தொடர் இறுதிக்  கட்டத்தை எட்டியுள்ளது. நவி மும்பை, கோவா, புவனேஸ்வரில் நடக்கும் இந்தப் போட்டியில் இந்தியா உட்பட 16 நாடுகள் பங்கேற்றன. இந்தியா லீக் சுற்றுடன் வெளியேறியது. காலிறுதி ஆட்டங்களில் நைஜீரியா அணி அமெரிக்காவையும், ஜெர்மனி அணி பிரசேிலையும், கொலம்பியா அணி தான்சானியாவையும், நடப்பு சாம்பியன் ஸ்பெயின் அணி ஜப்பானையும் வீழ்த்தின. இந்நிலையில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இன்று மாலை 4.30க்கு தொடங்கும் முதல் அரையிறுதியில் நைஜீரியா - கொலம்பியா அணிகள் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு ஆரம்பிக்கும் 2வது அரையிறுதியில் ஜெர்மனி - ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன. இறுதிப் போட்டி, நவி மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் அக்.30ம் தேதி இரவு 8.00 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.

Related Stories: