×

17 பந்தில் அரை சதம் ஸ்டாய்னிஸ் அதிரடியில் ஆஸி. அபார வெற்றி

பெர்த்: இலங்கை அணியுடனான உலக கோப்பை டி20 முதல் பிரிவு லீக் ஆட்டத்தில், ஸ்டாய்னிஸ் அதிரடியால் ஆஸ்திரேலியா அபாரமாக வென்றது. பெர்த் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸி. பந்துவீச... இலங்கை 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன் குவித்தது. நிசங்கா 40 ரன், தனஞ்ஜெயா 26, சரித் அசலங்கா 38*, சமிகா 14* ரன் எடுத்தனர். ஆஸி. தரப்பில் ஹேசல்வுட், கம்மின்ஸ், ஸ்டார்க், ஏகார், மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 16.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு158 ரன் எடுத்து வென்றது. வார்னர் 11, மிட்செல் மார்ஷ் 18, மேக்ஸ்வெல் 23 ரன் (12 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். கேப்டன் பிஞ்ச் 31 ரன் (42 பந்து, 1 சிக்சர்), ஸ்டாய்னிஸ் 59 ரன்னுடன் (18 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகன்: ஸ்டாய்னிஸ். ஆஸி. அணி 2 புள்ளிகள் பெற்றது.

Tags : Stoinis ,Aussie , 17th ball half century Stoinis in action Aussie. Huge success
× RELATED ஸ்டொய்னிஸ் 124, கெய்க்வாட் 108* ரன் விளாசல் வீண்: சென்னையை வீழ்த்தியது லக்னோ