×

மெக்சிகோ ஓபன் டென்னிஸ் பெகுலா சாம்பியன்

குவதலஜாரா: மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், அமெரிக்க வீராங்கனை ஜெஸ்ஸிகா பெகுலா சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் கிரீஸ் வீராங்கனை மரியா சாக்கரியுடன் (27வயது, 6வது ரேங்க்) மோதிய பெகுலா( 28வயது,5 வது ரேங்க்) அதிரடியாக புள்ளிகளைக் குவித்து  6-2, 6-3 என நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி கோப்பையை முத்தமிட்டார். இப்போட்டி 1 மணி, 10 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. பெகுலாவின் 13ஆண்டு டென்னிஸ் வாழ்க்கையில், இது அவர் பெறும் 2வது டபிள்யூடிஏ சாம்பியன் பட்டமாகும். இந்த வெற்றியின் மூலம் உலக தரவரிசயைில் 2 இடங்கள் முன்னேறிய பெகுலா முதல் முறையாக 3வது இடத்தை பிடித்தார். 6வது இடத்தில் இருந்த சாக்கரி ஒரு இடம் முன்னேறி 5வது இடத்தை எட்டியுள்ளார். 


Tags : Pegula ,Mexico Open , Pegula is the Mexico Open tennis champion
× RELATED சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் ஜெஸிகா பெகுலா