×

தென் ஆப்ரிக்காவை துரத்தும் துரதிர்ஷ்டம்

ஹோபர்டில் ஜிம்பாப்வே - தென் ஆப்ரிக்கா மோதிய 2வது பிரிவு லீக் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டதால் 9 ஓவர் போட்டியாக அறிவிக்கப்பட்ட நிலையில், டாஸ் வென்று பேட் செய்த ஜிம்பாப்வே 9 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 79 ரன் எடுத்தது. வெஸ்லி 35* ரன் (18 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), மில்டன் 18 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 51 ரன் குவித்த நிலையில் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. குவின்டன் டி காக் 47 ரன் (18 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் பவுமா 2 ரன்னுடன் (2 பந்து) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இரு அணிகளும் தலா 1 புள்ளி பெற்றன. உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களில் தென் ஆப்ரிக்கா துரதிர்ஷ்டவசமாக வெற்றி வாய்ப்பை பறிகொடுக்கும் சோக வரலாறு மீண்டும் அரங்கேறியது, அந்த அணி ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.


Tags : South Africa , Bad luck chasing South Africa
× RELATED தென்னாப்பிரிக்காவில் பாலத்தை...