சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை நியமித்தார் ஓபிஎஸ்

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் சென்னை, விழுப்புரம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கட்சியில் புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தனது அணியை சேர்ந்தவர்களுக்கு கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வழங்கியுள்ளார். அதன்படி வடசென்னை, தென்சென்னை, சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு மாவட்ட அவை தலைவர், இணை செயலாளர், துணை செயலாளர்கள், பொருளாளர், ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர்கள், மருத்துவ அணி செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

Related Stories: