கோவை சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்: எடப்பாடி, ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்றுமுன்தினம் வெளியிட்ட அறிக்கை: கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு என்பது தற்செயலாக நடந்த விபத்தா? அல்லது ஏதேனும் சதி வேலையா? என்பதை கண்டறிய வேண்டும். மேலும், இதன் பின்னணியில் சமூக விரோதிகள் எவரேனும் இருக்கின்றனரா என்று காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திட வேண்டும்.

* ஆக்கப்பூர்வ நடவடிக்கை:

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வர் சட்டம்-ஒழுங்கு கோவை பிரச்னையில் உடனடியாக தனிக்கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தையும், தமிழ்நாடு மக்களையும் வன்முறையாளர்களிடமிருந்தும், தீவிரவாதிகளிடமிருந்தும், பயங்கரவாதிகளிடமிருந்தும் காப்பாற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: