×

தொடர்ந்து சொதப்பினால் தினேஷ் கார்த்திக்கு கல்தா! ரிஷப் பன்ட்டுக்கு வாய்ப்பு?

மெல்போர்ன்: டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட பிறகு விக்கெட் கீப்பர் இடத்திற்கு தினேஷ் கார்த்திக், ரிஷப் பன்ட் இடையே பலத்த போட்டி நிலவி வந்தது. இந்த இருவருக்கும் மாறிமாறி வாய்ப்பு கொடுக்கப்பட்டு வந்த நிலையில், அதில் சில போட்டிகளில் தினேஷ் கார்த்திக் இறுதிகட்டத்தில் இறங்கி அதிரடியாக ஆடி அணியை வெற்றிபெற வைத்ததால் அவர் மீது நம்பிக்கை அதிகரித்தது. இதனால் ரிஷப் பன்ட் ஓரங்கட்டப்பட்டு தினேஷ் கார்த்திக்கிற்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதனால் டி20 உலகக் கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

குறிப்பாக, பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் கடைசி கட்டத்தில் 2 பந்துகளில் 2 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை வந்தபோது, தினேஷ் கார்த்திக் களத்தில் இருந்ததால் எளிதாக வென்றுவிடலாம் என கருதப்பட்டது. ஆனால், தினேஷ் கார்த்திக் இறங்கி அடிக்க முற்பட்டு, ஸ்டெம்பிட் ஆகி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இவரை அணியில் சேர்த்ததே இறுதி ஓவர்களில் சிறப்பாக ஆடுவார் என்ற காரணத்திற்காக மட்டும்தான். ஆனால், முக்கியமான போட்டியில், முக்கியமான நேரத்தில் இறங்கி விளையாடி ஸ்டெம்பிட் ஆனதுதான், தினேஷ் கார்த்திக் மீதான நம்பிக்கையை குறைத்துள்ளது. இதனால், இவருக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா, கிடைக்காதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்திய அணி தனது அடுத்த போட்டியில், 27ஆம் தேதி நெதர்லாந்து அணிக்கு எதிராக களமிறங்க உள்ளது. எதிரணியைவிட இந்திய அணி சிறந்ததாக இருக்கிறது. இதனால், தினேஷ் கார்த்திக்கை லெவன் அணியில் இருந்து நீக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. அப்படி நீக்கி ஒருவேளை ரிஷப் பன்ட் சொதப்பிவிட்டால், மீண்டும் பெரிய குழப்பம் ஏற்படும். கேப்டன் ரோகித் ஷர்மா இதனை விரும்ப மாட்டார் என்றுதான் கூறப்படுகிறது. ஒருவேளை, தினேஷ் கார்த்திக் தொடர்ந்து இரண்டு, மூன்று போட்டிகளில் சொதப்பினால் ரிஷப் பன்ட் சேர்க்கப்படுவார் என கிரிக்கெட் விமர்சகர்கள் கணித்துள்ளனர். இந்திய அணி 27ஆம் தேதி நெதர்லாந்து அணிக்கு எதிராகவும், 30ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிராகவும் களமிறங்க உள்ளது.

Tags : Dinesh Karti ,Rishabh , Dinesh Karti's Kalta due to constant chatter! Chance for Rishabh Bunt?
× RELATED ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுகிறார் ரிஷப் பந்த்: பிசிசிஐ தகவல்