×

அயோத்திதாசர் மணிமண்டபம், அம்பேத்கார் மணி மண்டப மறு சீரமைப்புப் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு

சென்னை: அயோத்திதாசர் மணி மண்டபம் அமைக்கும் பணி, அண்ணல் அம்பேத்கர் மணி மண்டபம் மறு சீரமைப்புப் பணிகள், வால்டாக்ஸ் சாலை மழைநீர் வடிகால் ஆகிய பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன என்று மாண்புமிகு பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் அறிவிப்பு.

சென்னை: பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் இன்று பொதுப்பணித்துறையில் கட்டுமானப் பணி நடைபெற்று புதியதாக அமைக்கப்பட்டு வரும் அயோத்திதாசர் மணிமண்டபம், அம்பேத்கார் மணி மண்டப மறு சீரமைப்புப் பணிகள் மற்றும் சென்னை மையப்பகுதியான வால்டாக்ஸ் சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய்ப்பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்கள்.

முதலமைச்சர் அவர்கள் 110 விதியின்கீழ், 2021-2022 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், அயோத்திதாசருக்கு மணிமண்டபம் வடசென்னையில் கட்டப்படும் என்று அறிவித்தார்கள். மீண்டும் முதலமைச்சர் அவர்கள் பல்வேறு பணியின் காரணமாக விமான நிலையத்திற்கு செல்லும்போது, பொதுப்பணித்துறை அலுவலர்களை அழைத்து இந்தப் பகுதியில்தான் காமராசர் மணிமண்டபம், பக்தவச்சலம் மணிமண்டபம், இராஜாஜி மணிமண்டபம், ரெட்டைமலை சீனிவாசன் மணிமண்டபம் ஆகிய மணி மண்டபங்கள் இருப்பதால், அயோத்திதாசர் மணிமண்டபம் இந்தப் பகுதியில் அமைக்கப்படுவதுதான் சிறப்பாக இருக்கும் என்றுக்கூறி அயோத்திதாசர் மணிமண்டபத்தை சுமார் 4786 சதுரடி பரப்பளவில், ரூ.2.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட வேண்டும் என்று ஆணையிட்டதன் அடிப்படையில் இப்பணி 26.9.2022 முதல் துவங்கப்பட்டு விரைவாக நடைபெற்று வருகிறது.  2023 ஆம் ஆண்டு ஏப்ரல்  மாதம் இப்பணி நிறைவு பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார்கள்.

அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபம் சிதிலமடைந்து இருந்ததால், மறுசீரமைப்புப் பணி மேற்கொள்ள வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டதன்படி, அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபம் மறு சீரமைப்புப் பணிகள் துவக்கப்பட்டு நிறைவடையும் நிலையில் உள்ளது.  அண்ணல் அம்பேத்கர் சிலையும் அமைக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டதால், சிலை அமைக்கும் பணியும், நூலகம் அமைக்கும் பணியும்  நடைபெற்று வருகிறது. 27.10.2022 அன்று முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் திறந்து வைக்கப்படும் என்று தெரிவித்தார்கள்.

வடகிழக்கு பருவமழை சென்னையில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் பெய்யக்கூடிய நிலை உள்ளது.  சென்னையில் மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகள், போக்குவரத்து நெரிசல் காரணமாக பகலில் மேற்கொள்ள இயலவில்லை.  ஆகையால், இரவு 10 மணிக்குமேல் இப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது.  தீபாவளி அன்று இரவு 2 அளிவில் அமைச்சர் இப்பணிகளை ஆய்வு செய்தத்தார்.

வேளச்சேரி-பள்ளிக்கரனை சாலை வடிகால் பணிகள், நீர்வளத்துறை மூலம் மேற்கொள்ளப்பட வேண்டியப் பணிகள் நெடுஞ்சாலைத்துறையிடம் ஜூலை மாதம் ஒப்படைக்கப்பட்டு இப்பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்கள். சென்னை-துறைமுகம்-மதுரவாயல் உயர்மட்டச் சாலை, முத்தமிமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது உயர்மட்டச் சாலை அமைக்கப்பட வேண்டும் என்று திட்டமிட்டு, முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன்சிங் அவர்களால் தொடக்க விழா நடைபெற்றது.  இத்திட்டம் 10 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டது.  அப்போது ரூ.1000 கோடியில் முடிக்க வேண்டிய இப்பாலப்பணி தற்போது ரூ.5500 கோடியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) ஒப்பந்தப்போடப்பட்டு உள்ளது.  இதற்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி கொண்டிருக்கிறது.  

முதலமைச்சர் முதன் முதலாக பாரத பிரதமர் அவர்களை சந்தித்தப்போது, ஒன்றிய அரசு செயல்படுத்த வேண்டியதும், நிலுவையில் உள்ள திட்டங்களை எல்லாம் கொடுத்து அவற்றை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் தெரிவித்தார்கள். அதனை தொடர்ந்து பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் இத்திட்டம் குறித்து மூன்று முறை ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்களை சந்தித்து வலியுறுத்தியதன் அடிப்படையில், இப்பணிகளை துவக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பிரதமர் மோடி அவர்களால் நேரு ஸ்டேடியத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்கள்.

தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு அவர்கள், நான் ஆய்வுக்கு செல்வதைப்போல அவரும் ஆய்வு மேற்கொண்டு இப்பணிகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த  ஆய்வுப் பணியின்போது, பொதுப்பணித்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் இரா.விஸ்வநாத், சென்னை மண்டலத் தலைமைப் பொறியாளர் ஆயிரத்தரசு மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


Tags : Ayothidasar Manimandabam ,Ambedkar Mani ,Minister ,A. Etb Velu , Minister A. V. Velu personally inspects the renovation works of Ayodhyasar Mani Mandapam and Ambedkar Mani Mandapam.
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்