×

ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தீர்ப்பு அல்ல, அது ஒரு பரிந்துரை: கே.எஸ்.அழகிரி ட்விட்

சென்னை: ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தீர்ப்பு அல்ல, அது ஒரு பரிந்துரை என கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் உள்ள உண்மை தன்மையை ஆராய நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைத்து அந்த விசாரணை அறிக்கை  கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தீர்ப்பு அல்ல, அது ஒரு பரிந்துரை.

எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை சரியில்லாதபோது, ​​அவரை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல மருத்துவ வசதியுடன் கூடிய விமானத்தை ஏற்பாடு செய்தார் இந்திரா காந்தி. இதனால்தான் எம்.ஜி.ஆர். உயிர் பிழைத்தார். அதேபோல், பிரதமரோ அல்லது மாநில அரசில் உள்ள அமைச்சர்களோ ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மோடி செயல்பட்டிருந்தால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருக்கலாம்.’ என தெரிவித்துள்ளார்.

Tags : Arumukusamy Commission ,K. S.S. Aalakiri , Arumugasamy Commission report is not a verdict, it is a recommendation: KS Alagiri tweet
× RELATED ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்கு:...