×

திருவாரூர் மாவட்டம் ஆலந்தூர் கோயிலில் திருடப்பட்ட 2 உலோக சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு..

சென்னை: சிலை கடத்தல் தடுப்புபிரிவினர் தமிழகத்தில் இருந்து சிலை கடத்தல் மன்னர்களால் திருடப்பட்ட பல்வேறு தொண்மையான சிலைகளை கண்டுபிடித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் சென்னை மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்ட கடத்தல் சிலைகளை மீட்கப்பட்டுள்ளது .

அதே நேரத்தில் வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டு அங்குள்ள அருங்காட்சியம் மற்றும் இணையதளகாட்சிகளிலும் வைக்கப்பட்ட சிலைகளை தொடர்ந்து மீட்டெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். திருவாரூர் மாவட்டம் ஆலந்தூர் கோயிலில் திருடப்பட்ட 2 உலோக சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோமஸ்கந்தர் மற்றும் நடனமாடும் சம்மந்தர் சிலை அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கண்டுபிடித்துள்ளது.

ஆலத்தூர் விஸ்வந்தசாமி கோயிலில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு 2 சிலைகள் திருடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஏல மையங்களில் உள்ள இரு சிலைகளுக்கு உரிமை கோரி சிலை கடத்தல்தடுப்பு பிரிவு கடிதம் எழுதியுள்ளது.  சிலைகளை சட்டரீதியாக மீட்ப்பதற்கான ஆவணங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலிசார் , தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளனர். 2 சிலைகளும் விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தகவல் அளித்துள்ளனர்.


Tags : Thiruvarur District Alandur Temple Discovery ,US , 2 metal idols stolen from Alandur temple in Tiruvarur district found in America..
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...