×

தேசிய ஸ்குவாஷ் போட்டி வெண்கலம் வென்றார் ஷமீனா ரியாஸ்

சென்னை : மும்பையில் நடந்த இளையோர் தேசிய ஸ்குவாஷ் போட்டியில் தமிழக வீராங்கனை ஷமீனா ரியாஸ் வெண்கலம்  வென்றார். மும்பையில் உள்ள பாம்பே ஜிம்கானாவில் அக்.17ம் தேதி முதல் 21ம் தேதி வரை  ஜூனியர் தேசிய ஸ்குவாஷ் போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக வீராங்கனை ஷமீனா ரியாஸ் அரையிறுதி வரை முன்னேறினார்.

அதில் 5-11, 3-11, 5-11 என்ற நேர் செட்களில்  இவனா குப்தாவிடம் வெற்றி வாய்ப்பை இழந்து  வெண்கலப் பதக்கம் வென்றார். தேசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றுள்ள ஷமீனா ரியாஸ் முன்னாள் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் முகமது ரியாசின் மகள். சமீபத்தில் குஜராத்தில் நடந்த 36வது தேசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக ஸ்குவாஷ் அணியில் இடம் பெற்று  இருந்தார்.

Tags : Shameena Riaz , Chennai: Tamil Nadu player Shamina Riaz won bronze in the Junior National Squash Tournament held in Mumbai. in Mumbai
× RELATED பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்; ரைபாகினா முன்னேற்றம்