×

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் ரூ.464.21 கோடிக்கு மது விற்பனை: மதுரையில் அதிகம்

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் ரூ.464 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழக அரசுக்கு நிதி வருவாயை ஈட்டி தருவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது டாஸ்மாக் கடைகள்தான். அதிலும் முக்கியமாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மட்டும் பல நூறு கோடிகள் வருமானம் காரணமாக அரசுக்கு பெரும் நிதி வருவாயை அள்ளி கொடுத்து வருகிறது.

தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் கடந்த வருடம் 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது. ஒவ்வொரு வருடமும் முக்கிய பண்டிகையை முன்னிட்டு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படும். தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கமாக சனிக்கிழமை விடுமுறை நாளன்று சுமார் 150 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெறும். கடந்தாண்டு தீபாவளியை ஒட்டி நவம்பர் 3 மற்றும் 4ம் தேதி 2 நாட்களில் 431.03 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையானது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையொட்டி தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக ரூ.464.21 கோடி மதிப்பில் மது விற்பனை ஆகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நேற்று 23-ம் தேதி சென்னை-ரூ. 51.52 கோடி, திருச்சி - ரூ. 50.66 கோடி,சேலம் ரூ. 52.36 கோடி, மதுரை ரூ. 55.78 கோடி, கோவை-ரூ. 48.47 கோடி என மொத்தமாக ரூ. 258.79 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. நேற்று முன்தினம்,  சென்னை-ரூ. 38.64 கோடி, திருச்சி - ரூ. 41.36 கோடி, சேலம் - ரூ. 40.82 கோடி, மதுரை ரூ. 45.26 கோடி, கோவை ரூ. 39.34 கோடி என மொத்தமாக ரூ. 205.42 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.

Tags : Tamil Nadu ,Deepawali: ,Madurah , Liquor sales worth Rs 464.21 crore in last 2 days in Tamil Nadu on Diwali festival: Madurai is the most
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...