குறைந்த அளவு மாசுபடுத்தும் பசுமை பட்டாசுகள் வெடிக்க வேண்டும்: பொதுமக்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்

சென்னை: தீபாவளி அன்று அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்த்து, குறைந்த அளவு மாசுபடுத்தும் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதோடு இல்லாமல், உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பட்டாசுகளை வெடிக்க கூடாது. மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அதிக மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை தவிர்த்து இந்த ஆண்டு மாசற்ற தீபாளியை கொண்டாட வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடடு வாரிய சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: