சென்னையில் இருந்து மக்கள் கிளம்பியதால் கோயம்பேடு, பூந்தமல்லி பஸ் நிலையம் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடியது

சென்னை: இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால், நேற்று மதியத்துக்கு முன்பே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பொதுமக்கள் ெசன்றுவிட்டதால், கோயம்பேடு பூந்தமல்லி தற்காலிக பஸ் நிலையத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. தீபாவளி  பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழக  அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

கோயம்பேடு இருந்து தென் மாவட்டங்களுக்கும், பூந்தமல்லியில் இருந்து  வேலூர், கர்நாடகா, ஆந்திரா, ஓசூர், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு  சிறப்பு பேருந்துகள் கடந்த இரண்டு தினங்களாக இயக்கப்பட்டது. இந்நிலையில்  ஏராளமான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு தீபாவளி பண்டிகை கொண்டாட  சென்றனர். கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஏராளமான பேருந்துகளில்  ஆயிரக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

நேற்று மதியத்துக்கு முன்பே சென்னையில் இருந்து பெரும்பாலோனோர் சென்றுவிட்டனர். இதனால் சாலையில்  வாகனங்கள்  பயணிகள் குறைந்துவிட்டது. தினமும் சிறப்பு பேருந்துகள்  இயக்கப்பட்ட நிலையில் வெளியூர்செல்ல பயணிகள் அதிகம் வரவில்லை. இதனால் பூந்தமல்லி தற்காலிக பஸ் நிலையம் வெறிச்சோடியது.  

பூந்தமல்லி-பெங்களூரு  தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலின்றி வெறிச்சோடி கிடக்கிறது.

பஸ்நிலையத்தில் சிறப்பு பேருந்துகள் காலியாக இருந்தது. குறிப்பாக இந்த  மாதத்திலேயே காலாண்டு விடுமுறை, ஆயுத பூஜை விடுமுறைகளுக்கு பொதுமக்கள் அதிக அளவில் சொந்த ஊர்களுக்கு சென்றதால் சிலர் தீபாவளி  பண்டிகைக்காக சொந்த ஊர் செல்ல மக்கள் செல்லவில்லை  என்று கூறப்படுகிறது.  இதனால் கோயம்பேடு , பூந்தமல்லி பஸ் நிலையம் நேற்று பயணிகளின்றி  வெறிச்சோடிக் கிடந்தது.

Related Stories: