×

மயிலாடுதுறை அருகே 100 வீடுகளை 3 நாளாக சூழ்ந்து நிற்கும் தண்ணீர்: மக்கள் அவதி

கொள்ளிடம்: மயிலாடுதுறை அருகே 100 வீடுகளை 3 நாட்களாக தண்ணீர் சூழ்ந்துள்ளதால் தீபாவளி கொண்டாட முடியாமல் மக்கள் அவதியடைந்து உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் இன்று காலை நிலவரப்படி ஒரு லட்சத்து 22 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்று பழையாறு மீன்பிடி துறைமுகம் வழியே வங்ககடலில் கலந்து வருகிறது. கொள்ளிடம் அருகே உள்ள நாதல் படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ள மணல் மற்றும் மேலவாடி ஆகிய திட்டு கிராமங்களை தண்ணீர் சூழ்ந்து இந்த கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் அதிகப்படியாக செல்லும் தண்ணீர் பழையாறு துறைமுகம் அருகே வங்க கடலில் கலந்து கொண்டிருக்கும் நிலையில், காற்றழுத்த தாழ்வு நிலையால் கடல் சீற்றம் ஏற்பட்டு கொள்ளிடம் ஆற்றிலிருந்து செல்லும் தண்ணீர் எளிதில் கடலுக்குள் சென்று சேர முடியாமல் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பழையாறு துறைமுகம் அருகே உள்ள பக்கிங்காம்கால்வாயில் புகுந்து கால்வாயின் கரைவழியே வெளியேறி பழையாறு சுனாமி குடியிருப்பு பகுதியில் சுமார் 100 வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் தீபாவளி கொண்டாட முடியாமல் அவதியில் உள்ளனர்.

Tags : Mayiladududwara , Standing water surrounds 100 houses near Mayiladuthurai for 3 days: people are worried
× RELATED கொள்ளிடம் அருகே அளக்குடி கிராமத்தில்...