×

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளி பண்டிகையை கொண்டாட பொதுமக்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்

சென்னை: விபத்து, ஒலி மற்றும் மாசற்ற  தீபாவளி பண்டிகையை கொண்டாட பொதுமக்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும்.  இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.  அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன.

பட்டாசு வெடிப்பதால்  எழும் அதிகப்படியான  ஒலி மற்றும் காற்று மாசினால்  சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.  உச்ச நீதிமன்றம் தொரப்பட்ட வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி, பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும். அதன்படி, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும்,  கடந்த ஆண்டைப் போலவே   காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும்.

Tags : Pollution Control Board ,Diwali , Pollution Control Board appeals to the public to celebrate an accident, sound and pollution free Diwali
× RELATED திருமங்கலத்தில் தேர்தல்...