×

புரோ கபடி லீக்: அரியானாவை வீழ்த்தி குஜராத் 3வது வெற்றி

பெங்களூரு: 12அணிகள் பங்கேற்றுள்ள 9வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 33வது லீக் போட்டியில் பெங்களூரு புலஸ் 42-32 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 51-27 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை பந்தாடியது.

இரவு 9.30 மணிக்கு தொடங்கி நடந்த 35வது லீக் போட்டியில் குஜராத் 42-38 என்ற புள்ளி கணக்கில், அரியானா அணியை சாய்த்தது. 3வது வெற்றி பெற்ற குஜராத் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது. இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூரு புல்ஸ்-பாட்னா, இரவு 8.30 மணிக்கு உ.பி.யோத்தா-தமிழ் தலைவாஸ் அணிகள் மோதுகின்றன.

Tags : Pro Kabaddi League ,Gujarat ,Ariana , Pro Kabaddi League: Gujarat beat Ariana for 3rd win
× RELATED புனே – அரியானா பலப்பரீட்சை: புதிய சாம்பியன் யார் ?