×

23 வயதிற்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டி: இந்திய வீரர் அமன் ஷெராவத் தங்க பதக்கம் வென்று அசத்தல்

ஸ்பெய்ன்: 23 வயதிற்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஸ்பெயினில் நடைபெற்று வரும் 23 வயதிற்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத் தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

இந்த போட்டியில் பிரீஸ்டைல் 57 கிலோ எடை பிரிவில் 18 வயதுடைய இந்திய வீரர் அமன் ஷெராவத், துருக்கியின் அகமத் துமன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் 12-4 என்ற கணக்கில் துமனை வீழ்த்தி இந்திய வீரர் அமன் வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளார்.  

இதன் மூலம் இந்திய வரலாற்றில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் தங்க பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை அமன் ஷெராவத் பெற்றுள்ளார். இதற்கு முன் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ரவி தாஹியா, ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பஜ்ரங் பூனியா ஆகியோர், 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர்.

உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அமன் ஷெராவத்க்கு பல்வேறு தரப்பிரினிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றனர்.


Tags : World Championship ,Aman Sherawad , World Under-23 Wrestling Championships: India's Aman Sherawat wins gold medal
× RELATED கிரெக்கோ – ரோமன் உலக சாம்பியன்ஷிப்...