டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

மெல்போர்ன்: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 12 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோத உள்ளன. மெல்போர்னில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப்1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகள் உள்ளன.

குரூப்2-ல் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இன்டிகிய அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோர் உள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் விலகியது பின்னடைவாக அமைந்தாலும் அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அந்த இடத்தை நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை விரைவில் வீழ்த்தியது பாதகமாக அமைந்தது. எனவே இந்திய அணியின் தொடக்க வீரர்கள் பொறுப்புடன் ஆட பதிலடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: