தாம்பரத்தில் மீட்கப்பட்ட ரூ.100 கோடி மதிப்பு இரண்டரை ஏக்கர் நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்: மாநகர காவல் ஆணையரகம் கட்டப்படுகிறது

தாம்பரம்: தாம்பரத்தில் மீட்கப்பட்ட ரூ.100 மதிப்புள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் நேற்று அதிரடியாக இடித்து அகற்றப்பட்டன. இங்கு, தாம்பரம் மாநகர ஆணையரக அலுவலகம் புதிதாக கட்டும் பணி விரைவில் தொடங்கும் என போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். தாம்பரத்தில் மீட்கப்பட்ட அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றம், புதிய காவல் ஆணையரக அலுவலகம் கட்டும் பணி விரைவில் தொடங்கும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளர். தாம்பரம் காந்தி சாலை- ஜிஎஸ்டி சாலை சந்திப்பு அருகே அரசுக்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தில் தனியார் ஒருவர் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்தார். இந்த நிலத்தின் அருகே உள்ள பள்ளிக்கு இந்த நிலம் சொந்தம் என கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், நிலம் அரசுக்கு சொந்தமான நிலம், எனவே நிலத்தை மீட்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

 இதை தொடர்ந்து, தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமார், தாசில்தார் கவிதா தலைமையில் வருவாய்த் துறையினர், தாம்பரம் காவல் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் ஆக்கிரமிப்பு நிலத்தில் வசித்தவர்களை வெளியேற்றி கேட்டுக்கு சீல் வைத்து நிலம் மீட்கப்பட்டது. இதையடுத்து, இந்த நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் உதவியுடன் போலீசார் இடித்து அப்புறப்படுத்தினர்.

தாம்பரம் மாநகராட்சி மற்றும் மாநகர காவல் ஆணையரக அலுவலகங்கள் கட்டுவதற்கு இடம் தேடி வந்த நிலையில் மீட்கப்பட்ட அரசு நிலத்தில் தாம்பரம் மாநகர காவல் ஆணையராக அலுவலகம் புதிதாக கட்ட காவல்துறைக்கு ஒதுக்க செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய்த்துறை நில எடுப்பு ஆணையருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறைக்கு உடனடியாக நில மாற்றம் செய்து மீட்கப்பட்ட நிலத்தில் தாம்பரம் மாநகர காவல் ஆணையரக அலுவலகம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: