×

துணைவேந்தர் பதவி விவகாரம் தமிழக அரசு விசாரிக்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: பஞ்சாப் ஆளுநர் புகாரை தமிழக அரசு விசாரிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன் பேச்சில், ‘‘தமிழ்நாட்டில் துணைவேந்தர் பணியிடம் ரூபாய் 50 கோடி வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது’ என்று பகிரங்கமாக புகார் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பகிரங்கமாக கூறியுள்ள ஊழல் குற்றச்சாட்டை தமிழ்நாடு அரசு விரிவாக விசாரிக்க வேண்டும். கடந்த காலத்தில் நடைபெற்றுள்ள துணைவேந்தர் நியமனம் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
இதில் தவறுகள் நேர்ந்திருப்பதை உறுதி செய்து, ஊழல் முறைகளில் துணைவேந்தர் பதவியில் அமர்ந்துள்ளவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடாமல் தண்டிக்கப்பட வேண்டும்.

Tags : Tamil Nadu government ,Mutharasan , The Tamil Nadu government should investigate the issue of the post of vice-chancellor: Mutharasan insists
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...