×

தேர்தலில் போட்டியிட தடை: இம்ரான் வழக்கு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனது பதவிக்காலத்தில் பெறப்பட்ட அரசு பரிசுப்பொருட்களை சட்டவிரோதமாக விற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அரசு துறையான தோஷாகானா இம்ரான் மீது வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த அந்நாட்டு தேர்தல் ஆணையம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐந்து ஆண்டுகள் தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.


Tags : Imran , Banned from contesting elections: Imran's case
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு