×

பகவல் சிங் வீட்டில் மேலும் சில பெண்கள் நரபலி? கழிப்பறை தொட்டியில் போலீசார் பரிசோதனை: கேரளாவில் மீண்டும் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் பத்மா மற்றும் ரோஸ்லி தவிர மேலும் சில பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசுக்கு மீண்டும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பகவல் சிங்கின் வீட்டுக் கழிப்பறைத் தொட்டியை திறந்து போலீசார் பரிசோதனை நடத்தினர்.

கேரளாவில் நரபலி சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முகமது ஷாபி, பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களது 12 நாள் காவல் வரும் 22ம் தேதியுடன் நிறைவடைகிறது. தர்மபுரியை சேர்ந்த பத்மா மற்றும் எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி ஆகியோர் தவிர மேலும் சிலர் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று ஏற்கனவே போலீசுக்கு சந்தேகம் இருந்து வந்தது. இதை உறுதி செய்வதற்காக கடந்த வாரம் பகவல் சிங்கின் வீட்டில் மோப்ப நாய்களின் உதவியுடன் போலீசார் தோண்டி பரிசோதித்தினர். ஆனால் உடல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

அப்போது பகவல் சிங்கின் வீட்டுக்கு அருகே உள்ள இடங்களில் தோண்டி பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் உடல்கள் பகவல் சிங்கின் வீட்டுக் கழிப்பறைத் தொட்டியில் போடப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் போலீசுக்கு ஏற்பட்டது. இதையடுத்து கழிப்பறைத் தொட்டியை திறந்து பரிசோதிக்க போலீசார் தீர்மானித்தனர். இதன்படி நேற்று அங்கு பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் உடல்கள் எதுவும் சிக்கவில்லை.              

டம்மி பரிசோதனை: பத்மா மற்றும் ரோஸ்லியின் உடல்களை கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லிசி என்ற டாக்டர் தான் பிரேத பரிசோதனை செய்தார். அப்போது சில காயங்களில் அவருக்கு சந்தேகங்கள் ஏற்பட்டன.
இதுகுறித்து அவர் போலீசாரிடம் தெரிவித்தார். தன்னுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்காக பகவல் சிங்கின் வீட்டில் வைத்து மீண்டும் ஒரு டம்மி பரிசோதனை நடத்த வேண்டும் என்று அவர் போலீசாரிடம் கூறினார். அதற்கு போலீசாரும் சம்மதித்தனர்.

இதற்காக ஷாபி மற்றும் பகவல் சிங்கை போலீசார் நேற்று நரபலி கொடுக்கப்பட்ட வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நரபலி கொடுக்கப்பட்ட அறையில் பெண் வடிவில் அமைக்கப்பட்ட பொம்மையை வைத்து பரிசோதனை நடத்தப்பட்டது. உடல்களில் எந்தெந்த பகுதிகளில் வெட்டப்பட்டது என்பது குறித்து இருவரும் அதே போல நடித்துக் காண்பித்தனர். இதற்கிடையே ரோஸ்லியை கழுத்தை இறுக்கப் பயன்படுத்திய கயிறு ஆகியவற்றை எரித்து விட்டதாக ஷாபி விசாரணையில் கூறினார். அந்த இடங்களையும் போலீசார் பரிசோதித்தனர்.



Tags : Bhagalal Singh ,Kerala , A few more women were sacrificed in Bhagwal Singh's house? Police check the toilet tank: again excitement in Kerala
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...