இந்திய அரசு மயிலாடுதுறை மீனவருக்கு இழப்பீடு தர வேண்டும்: ராஜ்நாத் சிங்குக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்

மதுரை: கேரள மீனவர்களுக்கு இத்தாலி அரசு ரூ.10 கோடி வழங்கியதுபோல் இந்திய அரசு மயிலாடுதுறை மீனவருக்கு இழப்பீடு தர வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். மீனவர் வீரவேல் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் இந்திய கடற்படை பொறுப்பாளர் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆதார் கார்டை காட்டிய பிறகும் மீனவர்கள் சித்ரவதை என சு.வெங்கடேசன் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories: