கட்சி நிர்வாக வசதிக்காக தென்காசி மாவட்டம் இரண்டாக பிரிப்பு: திமுக பொது செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுக பொது செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிவிப்பு: கட்சி நிர்வாக வசதிக்காகவும்- கட்சி பணிகள் செம்மையாக நடைபெறவும், தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு ஆகிய மாவட்டங்கள் சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒன்றிய, நகர கழகங்கள் பின்வருமாறு அடங்கியதாக அமையும்.

தென்காசி வடக்கு மாவட்டம்- சங்கரன் கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி) சட்டமன்ற தொகுதிகளை அடங்கியதாக அமையும். இதில் சங்கரன்கோவில் (3 ஊராட்சிகள் மட்டும்), மேலநீலிதநல்லூர் கிழக்கு, மேலநீலிதநல்லூர் மேற்கு, மேலநீலிததநல்லூர் தெற்கு, குருவிகுளம் மேற்கு, குருவிகுளம் தெற்கு, குருவிகுளம் கிழக்கு ஆகிய ஒன்றியங்கள் மற்றும் சங்கரன்கோவில் நகரம், வாசுதேவநல்லூர் வடக்கு, வாசுதேவநல்லூர் தெற்கு, சங்்கரன்கோவில் வடக்கு, சங்கரன்கோவில் தெற்கு ஆகிய ஒன்றியங்கள் மற்றும் புளியங்குடி நகரம் ஆகிய ஒன்றியம், நகரங்கள் அடங்கியதாக இருக்கும்.

தென்காசி தெற்கு மாவட்டத்தில் கடையநல்லூர், ஆலங்குளம், தென்காசி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கும். மேலும் கடையநல்லூர், தென்காசி மேற்கு, செங்கோட்டை ஆகிய ஒன்றியங்கள் மற்றும் கடையநல்லூர் நகரம். ஆலங்குளம் தெற்கு, கடையம் வடக்கு, கடையம் தெற்கு, பாப்பாக்குடி, கீழப்பாவூர் கிழக்கு ஆகிய ஒன்றியங்கள். தென்காசி கிழக்கு, கீழப்பாவூர் மேற்கு, கடையநல்லூர் (3 ஊராட்சிகள் மட்டும்), ஆலங்குளம் வடக்கு ஆகிய ஒன்றியங்கள் மற்றும் தென்காசி நகரம், சுரண்டை நகரங்கள் அடங்கியதாக இருக்கும்.

Related Stories: