×

தீபாவளி பண்டிகை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் இலை விலை உயர்வு; காய்கறி சரிவு

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு மதுரை, வேலூர், ஒசூர், சேலம், திண்டுக்கல் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து லாரிகளில் பூக்கள் வருகிறது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்து வருகிறது. இன்று காலை ஒரு கிலோ மல்லி 800க்கும் முல்லை  450க்கும் ஜாதிமல்லி 300க்கும் கனகாபுரம் 600க்கும் சாமந்தி 100க்கும் சம்பங்கி 120க்கும் சாக்லெட் ரோஸ் 140க்கும் பன்னீர்ரோஸ் 120க்கும் மஞ்சள் ரோஸ் 160க்கும் ரெட் அரளி 200 க்கும் வெள்ளை அரளி 230க்கும் தவனம் 150க்கும் மருகு 120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மழை பெய்துவருவதால் அனைத்து காய்கறிகளின் விலை கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ நாட்டு தக்காளி 25க்கும் நவீன தக்காளி 30க்கும் கேரட் 60க்கும் பீன்ஸ் 40 க்கும் பீட்ரூட் 45க்கும் சவ்சவ் 13 க்கும் முள்ளங்கி 20க்கும் முட்டைகோஸ் 25க்கும் வெண்டைக்காய் 20க்கும் உஜாலா கத்திரிக்காய் 18க்கும் பாவக்காய் 30க்கும் புடலங்காய் 20க்கும் சுரக்காய் 25க்கும் சேனை கிழங்கு 32க்கும் முருங்கை காய் 60க்கும் வெள்ளரிக்காய் 10க்கும் பச்சைமிளகாய் 30க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இஞ்சி 75க்கும் எலுமிச்சை 70க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

காய்கறி மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறும்போது, ‘’ கர்நாடகா, ஆந்திரா மகாராஷ்டிரா மாநிலங்களில் பலத்த மழை பெய்துவருவதால் காய்கறிகள் விளைச்சல் அமோகமாக உள்ளது. அனைத்து காய்கறிகளும் தட்டுப்பாடு இல்லாமல் மார்க்கெட்டில் வந்து இறங்கியுள்ளது. எனவே அனைத்து காய்கறிகளின் விலைகள் குறைந்துள்ளது. ஒரு கிலோ பெரிய வெங்காயம் மட்டும் 18 ரூபாயில் இருந்து 35க்கும் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 120க்கு தொடர்ந்து ஒரு வாரமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்தாண்டு தீபாவளி முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளின் விலைகள் உயர்ந்தது. ஆனால் தீபாவளியை முன்னிட்டு அனைத்து காய்கறிகளின் விலைகள் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இல்லத் தரசிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் வியாபாரிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்’ என்றார். இதனிடையே கோயம்பேடு மார்க்கெட்டில் வாழை இலை கட்டு கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு வாழை இலை கட்டு 800க்கும் ஒரு தலைவாழை இலை 4 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Diwali festival ,Koyambedu , On the occasion of Diwali festival, the price of flowers and leaves has increased in Koyambedu market; Vegetable Decay
× RELATED கோயம்பேடு பூ மார்க்கெட் வருகின்ற 19ம்...