நடிகர் சல்மான் கானுக்கு டெங்கு

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு டெங்கு உறுதியாகி உள்ளதால், அவர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் (56) காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் ஷூட்டிங் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவில்லை.

மருத்துவர்களின் ஆலோசனைபடி தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். தற்போது டெங்கு பாதிப்பில் இருந்து படிப்படியாக குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தனியார் தொலைகாட்சி சேனலில் பிரபல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அவர், தற்போதைக்கு பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மாற்றாக கரண் ஜோஹர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: