தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: எடப்பாடி மீது குற்றம்சாட்டும் விசாரணை ஆணைய அறிக்கையை நிராகரிப்பதாக அண்ணாமலை அறிவிப்பு..!!

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக எடப்பாடி மீது குற்றம்சாட்டும் விசாரணை ஆணைய அறிக்கையை நிராகரிப்பதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி முடிவை விசாரணை ஆணையம் கேள்வி கேட்க முடியாது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை தொலைக்காட்சியில் பார்த்து எடப்பாடி பழனிசாமி தெரிந்து கொண்டதில் தவறில்லை. தூத்துக்குடி நிலவரம் குறித்து அதிகாரிகள் தகவல் கொடுத்திருந்தாலும் துப்பாக்கிச் சூட்டை டி.வி.யில் எடப்பாடி பார்த்திருக்கலாம் என அண்ணாமலை கூறினார்.

Related Stories: