×

சென்னை கே.எம்.சி. மருத்துவமனையில் ஓட்டுநர் ராயப்பா ராஜுவின் பிரேத பரிசோதனை வீடியோவில் பதிவு..

சென்னை: சென்னையில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணை கைதி தற்கொலை செய்துகொண்டார். 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த தெலுங்கானாவை சேர்ந்த ராயப்பன் ஷாஜி ஆண்டனி தற்கொலை செய்துகொண்டார்.  48 கிலோ மெத்தபெட்டமைன் என்ற தடை செய்யப்பட்ட போதை பொருளுடன் சோழவரம் அருகே ராயப்பன் கைது செய்யப்பட்டார். அயப்பாக்கத்தில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட நிலையில் தற்கொலை செய்துகொண்டார். வழக்குப்பதிவு செய்து திருமுல்லைவாயில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மத்திய போதை பிரிவு தடுப்பு அலுவலகம் ஆனது சென்னை அயப்பாக்கம் பகுதியில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு நேற்று விசாரணை கைதியான ராயப்பன் ஷாஜி ஆண்டனி அழைத்து வரப்பட்டார். ஏற்கனவே இவர் மீது ஒரு போதை பொருள் வழக்கு நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவரை சோழவரம் அருகே 48 கிலோ மெத்தபெட்டமைன் என்ற தடை செய்யப்பட்ட போதை பொருளுடன் போலீசார் கைது செய்துள்ளனர். நேற்றிரவு போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர் விசாரணை முடிந்து அடுத்த கட்டமாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.  இந்நிலையில், திடீரென 3-வது மாடியில் இருந்து ராயப்பன் குதித்துள்ளார். இதனை அடுத்து அவர் ஆவடி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக திருமுல்லை வாயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தான் ஒரு சாப்டுவேர் நிறுவனம் நடத்தி வருவதாக தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இவர் மீது 2 போதை பொருள் வழக்குகள் பதிவாகியுள்ளது சூழலில், இது தொடர்பான விவரம் குடும்பத்தினருக்கு தெரியவரும் என்ற அச்சத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையில் தற்கொலை செய்த நபரின் உடலை சென்னை கே.எம்.சி. மருத்துவமனையில் ஓட்டுநர் ராயப்பா ராஜுவின் பிரேத பரிசோதனை வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. ராயப்பா உடல், அம்பத்தூர் நீதித்துறை நடுவர் சரண்யா முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.


Tags : Chennai ,K.M.C. Postmortem ,Rayappa Raju , Chennai K.M.C. Postmortem video recording of driver Rayappa Raju at the hospital..
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...