×

பொதுமக்கள் தங்களின் வங்கி விவரங்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்: தஞ்சாவூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

தஞ்சாவூர்: அதிகரித்து வரும் சைபர் கிரைம் குற்றங்களிலிருந்து பொதுமக்கள் விழிப்புடன் இருந்து தாங்கள் சேமித்த பணத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள் என தஞ்சாவூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய எச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

வங்கியிலிருந்து தொலைபேசி மூலம் மேனேஜர் பேசுவதாக கூறியோ அல்லது வேறு யாராவது பேசுவதாக கூறியோ உங்களது Account Number, OTP Number-ஐ ATM Card Number, CVV Number கேட்டால் யாருக்கு கண்டிப்பாக தெரிவிக்ககூடாது. உங்கள் இடத்தில் மொபைல் டவர் அமைக்க உள்ளோம் எனவும் பல இலட்சங்கள் அட்வான்சையும், மாத மாதம் பல ஆயிரங்களில் வாடகையும் தருகிறோம் எனவும் அதை பதிவு செய்து தங்களது ஆவணங்களையோ அல்லது பணமோ அவர்களுக்கு கண்டிப்பாக அனுப்பக்கூடாது.

ஏமாற்றுக்காரர்கள் Facebook-ல் உங்களுக்கு அறிமுகமான நபர்களின் பெயரில் அவர்களது Photo-வை பயன்படுத்தி Fake Facebook Account- உருவாக்கி Friend Request கொடுத்து பின்பு Messenger Chat, WhatsApp Chat மூலமாக அவசர தேவை என கூறி பணம் அனுப்பக்கூறினால் கண்டிப்பாக அனுப்பக்கூடாது. பிரபலமான நிறுவனங்களின் பெயரில் போலியான வேலைவாய்ப்புகள் உள்ளதாக SMS, Email, Online jobs website மூலமாக விளம்பரங்களை அனுப்பி, உங்களை ஏமாற்றக்கூடும்.

அவர்கள் ஏதேனும் காரணம் கூறி பணம் கட்டச்சொன்னால் அவர்களிடம் பணத்தை செலுத்தி ஏமாறாதீர்கள். ஏமாற்றும் நபர்கள் Indian Army-ல் பணிபுரிவதாகவும், பணிமாறுதலில் செல்வதால் பாதிவிலைக்கு OLX, Quicker போன்ற தளங்களில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை குறைந்த விலைக்கு விற்பதாக அவர்களின் புகைப்படத்துடன் வெளியிட்டு பலரை மோசடி செய்துள்ளார்கள். எனவே எவ்வித பணமும் அவர்களுக்கு செலுத்தி ஏமாறாமல் எச்சரிக்கையாக இருங்கள்  தெரிவித்தனர்.

பணம் அல்லது விலை உயர்ந்த பொருட்கள் உங்களுக்கு பரிசாக விழுந்திருப்பதாக செல்போன் வாயிலாக தொடர்பு கொள்ளும் மர்ம நபர்களின் பேச்சை நம்பி, முன்பணம் செலுத்தி ஏமாறாமல் எச்சரிக்கையாக இருங்கள். அறிமுகம் இல்லாத நபர்கள் இணையதள வீடியோ காலில்வந்து தங்களிடம் ஆபாசமான காட்சிபதிவை பார்ப்பது போல் பதிவு செய்து அதனை இணையதளத்தில் வெளியிட போவதாக மிரட்டி பணம் பறிக்கும் கும்பலிடம் சிக்காமல் உஷாராக இருங்கள். உங்களுடைய KYC-ஐ அப்பேட் செய்ய வேண்டுமென வரும் போலியான SMS உள்ள Link-ல் சென்றால் பணம் இழப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது உஷாராக இருங்கள் என்று கூறியுள்ளனர்.


Tags : Thanjavur ,District ,Cybercrime Police , Public should not share their bank details with anyone: Thanjavur District Cyber ​​Crime Police warns
× RELATED வாக்கு பதிவான இயந்திரங்கள் பூட்டி...