சென்னை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணை கைதி தற்கொலை..!!

சென்னை: சென்னையில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணை கைதி தற்கொலை செய்துகொண்டார். 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த தெலுங்கானாவை சேர்ந்த ராயப்பன் ஷாஜி ஆண்டனி தற்கொலை செய்துகொண்டார்.  48 கிலோ மெத்தபெட்டமைன் என்ற தடை செய்யப்பட்ட போதை பொருளுடன் சோழவரம் அருகே ராயப்பன் கைது செய்யப்பட்டார். அயப்பாக்கத்தில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட நிலையில் தற்கொலை செய்துகொண்டார். வழக்குப்பதிவு செய்து திருமுல்லைவாயில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: