எடப்பாடி மீது நடவடிக்கை? அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக் கோட்டை: புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஆறுமுகசாமி அறிக்கை தாக்கல் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் யார்? யார்? மீது என்னென்ன குற்றச்சாட்டுகளை, ஆணையம் சுமத்தி இருக்கிறதோ அவர்களிடம் விளக்கம் கேட்டு அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆணையத்தை அரசியலுக்காக பயன்படுத்தவில்லை. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஆணையம் அறிக்கைப்படி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து உள்துறை தான் முடிவு செய்யும். இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.

Related Stories: