×

நாசா ஜெட் புரபெல்சன் ஆய்வகத்துடன் இணைந்து விண்வெளி நிலையத்தில் கிருமிநீக்கம் செய்யும் ஆய்வு: சென்னை ஐஐடி தகவல்

சென்னை: சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: விண்வெளி பயணத்தை பாதுகாப்பானதாக மாற்ற, சர்வதேச விண்வெளி நிலையத்தில் நடக்கக்கூடிய நுண்ணுயிரி தொடர்புகளை சென்னை ஐஐடி மற்றும் நாசா ஜெட் புரபெல்சன் ஆய்வகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து அதன் தொடர்புகளை ஆய்வு செய்து வருகின்றனர். விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் தங்கள் பயணத்தின்போது நோய் எதிர்ப்பு சக்தியில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.

எனவே விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருக்கும் நுண்ணுயிரிகளை பற்றி ஆய்வு மேற்கொள்வதும், விண்வெளி வீரர்களின் ஆரோக்கியம் தொடர்பாக புரிந்துகொள்வதும் அவசியமாகிறது. எனவே நுண்ணுயிரிகளால் விண்வெளி வீரர்களின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படும்  பட்சத்தில் அதன் தாக்கத்தை குறைக்க விண்வெளி ஆய்வு நிலையங்களை  கிருமிநீக்கம் செய்வதற்கான உக்திகளை வகுக்க இந்த ஆய்வு உதவிகரமாக  இருக்கும்.


Tags : NASA ,IIT ,Chennai , NASA JET Probes in Collaboration with Space Station Disinfection Study: IIT Chennai Info
× RELATED நீரியல் நிபுணர் இரா.க.சிவனப்பன் காலமானார்..!!