ஹாலிவுட்டில் நடிக்கிறார் ஸ்ருதிஹாசன்

சென்னை: ஹாலிவுட் படத்தில் முதல்முறையாக நடிக்கிறார் ஸ்ருதிஹாசன். பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர். தமிழ் நடிகர்களில் தனுஷ் ஹாலிவுட்டில் உருவான தி கிரே மேன் படத்தில் நடித்தார். இப்போது ஸ்ருதிஹாசன் அங்கு நடிக்க இருக்கிறார். ஸ்ருதிஹாசன் ஹாலிவுட்டில் உருவாக இருக்கும் சைக்கோ திரில்லர் படத்தில் நடிக்க உள்ளார். ‘தி ஐ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை டெஃப்னெ ஸ்க்மன் இயக்க உள்ளார். இந்த படத்தில் ஹாலிவுட்டின் முன்னணி நடிகரான மார்க் ரெளலே முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில் ஹாலிவுட் திரில்லர் படமான ‘தி ஐ’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக கிரீஸ் நாட்டிற்கு சென்று உள்ளதாக ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் தனக்கு மிகவும் ஸ்பெஷலான படம் என்றும் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது தனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்துள்ளது. அப்பா கமலும் தனக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதாக கூறியுள்ளார். ஏற்கனவே பிரபாஸ் நடித்து வரும் ‘சலார்’ படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிக்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. அதேபோல் என்டிஆர் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகிவரும் படத்திலும் சிரஞ்சீவியின் அடுத்த படத்திலும் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: