×

ஜிம்பாப்வே முன்னேற்றம்

உலக கோப்பை டி20 முதல் சுற்று பி பிரிவில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே - ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. டாஸ் வென்று பேட் செய்த ஸ்காட்லாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்தது. தொடக்க வீரர் ஜார்ஜ் முன்சி அதிகபட்சமாக 54 ரன் (51 பந்து, 7 பவுண்டரி) விளாசினார். மெக்லியாட் 25, கேப்டன் பெர்ரிங்டன் 13, லீஸ்க் 12 ரன் எடுத்தனர்.

ஜிம்பாப்வே பந்துவீச்சில் சதாரா, ரிச்சர்ட் தலா 2, பிளெஸ்ஸிங், சிக்கந்தர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே 18.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்து வென்றது. கேப்டன் கிரெய்க் எர்வின் 58 ரன் (54 பந்து, 6 பவுண்டரி), சிக்கந்தர் ராசா 40 ரன் (23 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி வெற்றிக்கு உதவினர். சிக்கந்தர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். பி பிரிவில் முதல் 2 இடங்களைப் பிடித்த ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறிய நிலையில், ஸ்காட்லாந்து (2) மற்றும் வெஸ்ட் இண்டீஸ் (2) அணிகள் ஏமாற்றத்துடன் வெளியேறின.

Tags : Zimbabwe , Zimbabwe progress
× RELATED இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் டி20 தொடர் ஜூலை மாதம் தொடக்கம்!