×

சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக வட்ட செயலாளர்கள் பட்டியல்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக வட்ட செயலாளர்கள் பட்டியலை பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுகவின் 15வது பொது தேர்தலை முன்னிட்டு வட்ட தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்ட நிர்வாகிகள் மாவட்டம் வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சென்னையில் மாவட்டம் வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியலை பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார். அதாவது பெரம்பூர், ஆர்.கே.நகர், ராயபுரம், திருவொற்றியூர், மாதவரம், எழும்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர், துறைமுகம், அம்பத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மயிலாப்பூர், தி.நகர், சைதாப்பேட்டை, கே.கே.நகர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், மதுரவாயல், ஆலந்தூர், பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்ட தலைவர்கள், செயலாளர்கள், துணை செயலாளர்கள், பொருளாளர், பிரதிநிதிகள் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

Tags : Chennai ,Thuraymurugan , DMK Circle Secretaries Elected in Chennai: Duraimurugan Announcement
× RELATED ஆன்லைனில் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்