×

திமுக செய்தி தொடர்பு செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட்

சென்னை: கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக திமுக செய்தி தொடர்பு செயலாளர் ராதாகிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்து துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார். திமுக பொது செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக செய்தித் தொடர்பு செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக(சஸ்பெண்ட்) நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : DMK ,press secretary ,KS Radhakrishnan , DMK press secretary KS Radhakrishnan suspended
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...