சிதம்பரம் பகுதியில் தொடர் மழையால் சாலையோர வியாபாரிகள் பாதிப்பு

சிதம்பரம்: சிதம்பரம் பகுதியில் தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருப்பதால் சாலையோர கடைகள் வைத்திருப்பவர்கள்,  தள்ளுவண்டிய வியாபாரிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள். தீபாவளி பண்டிகையை ஒட்டி மேலவீதி கடைவீதியில் ஜவுளிகள் வாங்கவும் பொருட்கள் வாங்கவும் காய்கறி வாங்கவும் எப்போதும் கூட்டம் அதிகமாக இருந்த வண்ணம் இருக்கும்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் இந்த பகுதியில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. தள்ளுவண்டியில் வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகள் மற்றும் ஜவுளிகள் வாங்க வரும் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள். கடைகளை மூடி வைத்து மழை எப்போது விடும் என்ற நிலையில் வியாபாரிகள் நின்று கொண்டுள்ளனர்.

Related Stories: