தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி 24ம் தேதி வாக்கில் புயலாக மாறும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 25ம் தேதி மேற்கு வங்கம், வங்கதேச கடற்கரை நோக்கி புயல் நகரக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

சென்னை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதாவது, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருச்சி, மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. விழுப்புரம், செங்கல்பட்டு, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் நாளை 29 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும். கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், ராமநாதபுரம், சிவகங்கை, குமரி, தென்காசி மாவட்டங்களில் நாளை ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: