×

நிற்காமல் சென்ற படகு மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு: மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் காயம்..!

மயிலாடுதுறை: தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீனவர் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மயிலாடுதுறை மீனவர் ஒருவர் காயம் அடைந்துள்ளார். காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மீனவர்கள் 10 பேர் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு விசைப்படகில் மீன் பிடிக்க வந்துள்ளனர். நாகை மாவட்டம் கோடியக்கரை கடலோரப் பகுதிகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, ரோந்து சென்ற இந்திய கடற் படை, அவர்களது படகை நிறுத்த கூறியும், ஆனால் நிறுத்தாமல் சென்றதாகும் அதன் காரணமாக துப்பாக்கி சூடு நடத்தியாகவும் சொல்லப்படுகிறது.

இதில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த மீனவர் வீரவேல் என்பவருக்கு காலில் துப்பாக்கி கொண்டு பாய்ந்துள்ளது. இதையடுத்து இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் காயமடைந்த மீனவர் மீட்கப்பட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Indian Navy ,Mayeladu , Indian Navy fired at a boat that did not stop: A fisherman from Mayiladuthurai was injured
× RELATED இந்திய கடற்படையின் புதிய தளபதியாக...