ஸ்டெர்லைட் துப்பாக்கிசூடு சம்பவம் எடப்பாடிதான் முழு பொறுப்பேற்க வேண்டும்: டிடிவி தினகரன் கருத்து

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று அளித்த பேட்டி: ஜெயலலிதா மரணம் என்பது இயற்கையானது. சிபிஐ விசாரித்தால் தான் உண்மை வெளிப்படும். எடப்பாடி பழனிசாமி, ஆட்சி அதிகார பலம் இருந்ததால் ஆட்டம் போட்டார். இப்போது அதெல்லாம் இல்லாததால் விரக்தியில் உள்ளார். தனிப்பட்ட பிரச்னைக்காக உண்ணாவிரதம், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் என்பது உண்மையில் ஒரு அரசியல்வாதியாக வருத்தமாக உள்ளது.

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு நடந்தபோது எடப்பாடிக்கு உண்மை தெரியும். ஒரு முதலமைச்சருக்கு ஒவ்வொரு நிமிடமும் என்ன நடக்கும் என்பது தெரியும். இவருக்கு தெரியாமல் இருக்காது. முதலமைச்சராக இருந்த அவர் (எடப்பாடி) தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். அவர் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு காரணமானவர்கள், முதலமைச்சராக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கையாகும் என்றார்.

Related Stories: