×

மாட்டு சாணத்தில் ஒரு லட்சம் விளக்கு: சிறை கைதிகள் மும்முரம்

ஆக்ரா: உத்தரப் பிரதேசத்தில் தீபாவளியை முன்னிட்டு சிறை கைதிகள் மாட்டு சாணத்தில் ஒரு லட்சம் விளக்குகளை தயாரித்து வருகின்றனர்.  உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள மாவட்ட சிறைச்சாலை வளாகத்தில் கோசாலை அமைந்துள்ளது. இங்கு சேகரிக்கப்படும் சாணத்தில் இருந்து சிறை கைதிகள் விளக்குகளை தயார் செய்துள்ளனர்.  தீபாவளியை முன்னிட்டு ஒரு லட்சம் விளக்குகளை அவர்கள் தயாரிக்க உள்ளனர். 12 கைதிகள் இணைந்து விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து சிறை கண்காணிப்பாளர் சலோனியா கூறுகையில், ‘‘சிறை கைதிகள் 25 ஆயிரம் விளக்குகளை தயார் செய்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் தினசரி ரூ.25 கூலி வழங்கப்படுகிறது. இந்த விளக்குகள் ஒன்று 40 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஏற்கனவே, 25 ஆயிரம் அகல் விளக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒரு லட்சம் விளக்குகளை தயார் செய்ய உள்ளனர். அன்வாக்கேடாவில் உள்ள வேதமாதா ஸ்ரீகாயத்ரி அறக்கட்டளை 51 ஆயிரம் விளக்குகள் கேட்டுள்ளனர். மீதமுள்ளவை சிறை வாசலில் விற்பனைக்கு வைக்கப்படும். கோதி மீனா பஜாரில் கண்காட்சிக்கும் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது,” என்றார்.


Tags : One lakh lamps in cow dung: Jail inmates are busy
× RELATED இந்தியாவின் 17 வங்கிகளில் மோசடி செய்து...