அச்சுதானந்தனுக்கு 99வது பிறந்தநாள்

திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர்  வி.எஸ்.அச்சுதானந்தன். இவர், 2006 முதல் 2011 வரை கேரள முதல்வராக இருந்துள்ளார். கடந்தாண்டு பக்கவாத நோய் ஏற்பட்டதால் திருவனந்தபுரத்தில் உள்ள அவரது மகன் அருண்குமார் வீட்டில் இப்போது தங்கியுள்ளார்.  நேற்று அவர் தனது 99வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராய்  விஜயன், அமைச்சர்கள் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: